வா சேர்ந்தே இருப்போம்
நொடியை நாளாக்கவும், துளியை கடலாக்கவும் காதலர்களால் மட்டுமே முடியும்.
*
வா சேர்ந்தே இருப்போம் –
வானம் வரைக்கும் நிறைவோம்..
அதே அதே நீ நானாய் –
அதே அதே நாம் நாமாய்..
வா வளர்ந்தே தேய்வோம் –
வையம் முழுதும் பாய்வோம்..
அதே அதே நீ நானாய் –
அதே அதே நாம் நாமாய்..
நொடி அதை நாளாக்கி –
நனைந்து அணைந்து கொள்வோம்..
துளி அதை கடலாக்கி –
கண்டம் கடந்து செல்வோம்..
இதழ்வழி உணர்வை மூட்டி –
இனிமை சேர்க்கலாம்..
வா சேர்ந்தே இருப்போம்…
*
குரல் : ஷ்ரவன் கலை
உயிரோவியம் : மீரா
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.