கைக்கிளையால்
கண்ணனைப் பார்த்து உருகி மருகிப் பாடும் ஆண்டாளைத்தான் நாம் இதுநாள்வரை பார்த்திருக்கிறோம். ஆண்டாளைப் பார்த்து உருகி மருகிப் பாடும் கண்ணனை இங்கே முதல் தடவையாகப் பார்க்கலாம்!
*
கைக்கிளையால் – சுடர்
மைக்கிளையாள்.. (2)
உருகி மருகிப் பாட்டெடுத்தாய்.. (2)
ஓடி ஆடிப் பாடித் திரிந்தாய் –
தேடி நாடி வாடிப் புரிந்தாய்..
ஏங்கி ஏங்கி தாங்கி சிரித்தாய் –
சூடி சூட்டி வாங்கி சிலிர்த்தாய்..
ஏங்கி தாங்கி வாங்கி சிலிர்த்தாய்..
கைக்கிளையால் – சுடர்
மைக்கிளையாள்.. (2)
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.