குறுந்தொகை கண்ணால
இலக்கியப் பித்துடையாள் தன் காதல் பித்தை இலக்கியப் பித்தோடு கலந்து இலக்கியக்காதல் சொட்டச் சொட்ட வழிய விடுகிறாள்.
*
குறுந்தொகை கண்ணால –
நெடுந்தொகை செய்தானே..
நற்றிணை கையால –
நற்றுணை எய்தானே..
புறநானூறு வழியில –
கலித்தொகை கொண்டேனே..
அகநானூறு மொழியில –
பரிபாடல் கண்டேனே..
ஐங்குறுநூறு அழகில் விழுந்து –
பதிற்றுப்பத்தில் எழுந்தேன்..
பத்துப்பாட்டு சுவையில –
மின்னலாய் மின்னினேன்..
*
அவனக் காணும் முன்னால –
தொல்காப்பியத்தில் தவிச்சேன்..
அவனக் கண்ட பின்னால –
திருக்குறள்ல மகிழ்ந்தேன்..
அவனில் தொலையும் முன்னால –
சிலப்பதிகாரத்தில் கொறஞ்சேன்..
அவனில் தொலைந்த பின்னால –
முத்தொள்ளாயிரத்தில் நெறஞ்சன்..
*
குரல் : ரம்யா மேனன் & ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : U K அருண்
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.