ஓட ஓட

நாளையை நினைத்துப் பார்க்காத, அதேநேரம் இன்றினை தொலைத்துவிடாத, கிராமத்து சிறுவர்களின் அழகிய வாழ்க்கை… சொல்லச் சொல்ல நீள்வது. சொல்லிடச் சொல்லிட இனிப்பது.

*

ஓட ஓட ஓட ஓட ஓட ஓட –
காலும் தேயாதே..
பாட பாட பாட பாட பாட பாட –
சொல்லும் தீராதே..

தேட தேட தேட தேட தேட தேட –
நாளும் போதாதே..
ஆட ஆட ஆட ஆட ஆட ஆட –
நெஞ்சும் ஓயாதே..


*


காத்தோட கதபேசி –
மரத்தோட ஒறவாடும்..
கவலைகள் இல்லாத கூட்டம்பாரு..

காவாயில் நீச்சல்கத்து –
கெணரெங்கும் குதிச்சாடும்..
தேவைகள் இல்லாத ஓட்டம்பாரு..

மரமேறி கொரங்கு ஆட்டம் –
கல்லவச்சி கப்ப ஆட்டம்..
ஏரிக்கர கூட்டாஞ்சோறு –
சுட்டுத்தின்ன ஆத்துமீனு..

நாளைய நெனைக்காத அழகிய –

இந்த அழகிய வாழ்க்கப்பாரு..
இன்னைய தொலைக்காத அதிசய –
இந்த அதிசய வாழ்வக்கேளு..


*


பனஓல காத்தாடி –
பசியாத்த சூரப்பழம்..
செல செய்ய சேத்துமண்ணு –
செட்டுசேரும் கலத்துமேடு..

தென்னமட்ட டிப்பிடிப்பி –
துரிஞ்சமர வர்ணக்கோலு..
அடிச்சியாட பேய்பந்து –
மறஞ்சிக்கொள்ள தின்னசந்து..

நாளைய நெனைக்காத அழகிய –

இந்த அழகிய வாழ்க்கப்பாரு..
இன்னைய தொலைக்காத அதிசய –
இந்த அதிசய வாழ்வக்கேளு..


*

குரல் : கோல்டு தேவராஜ்  & டி. மேதா

ஒளிப்பதிவு : U K அருண்           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=