உதிரும் இலைகள்

உதிரும் இலைகள் ஒருபோதும் கிளையில் போய் சேராது. உகுக்கும் கண்ணீர்த் துளி ஒருநாளும் கண்ணுள் போகாது. இப்படி இன்னும் எத்தனையோ உள்ளது, நம்மைச் சுற்றியும், நம்மிலும். ஆம்!

*

உதிரும் இலைகள் –

கிளையில் சேரா…

உகுக்கும் கண்ணீர் –

கண்ணுள் போகா…

ஓடும் நதிகள் –

திரும்பி ஏகா…

எல்லாம் பாடம் இங்கே…

சிந்தும் விண்ணீர் –

விண்ணில் வீழா…

பிரியும் இறகு –

சிறகில் கோரா…

முடியும் நாட்கள் –

திரும்ப வாரா…

எதிலும் பாடம் இங்கே…

*

கண்கள் காணும் யாவும் –

நிஜமில்லை…

இதயம் அறியும் எதுவும் –

பொய்யில்லை…

உலகப் படைப்பில் ஒன்றும் –

நிலையில்லை…

இதனைப் புரிந்தால் துன்பம் –

இனியில்லை…

உதிரும் இலைகள்…

உகுக்கும் கண்ணீர்…

ஓடும் நதிகள்…

இங்கே…

*

குரல் : ஷ்ரவன் கலை                  

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி           

படத்தொகுப்பு : சேதுபதி U K

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=