ஓடிடும் கால்களே
நாம் உண்ணும் உணவின் நெல்மணி எங்கே விளைந்தது என என்றாவது சிந்தித்திருக்கிறோமா? ஓடிக்கொண்டிருக்கும் நம் கால்களை நிறுத்தி, தேடிக்கொண்டிருக்கும் நெஞ்சத்திடம் கேட்டால் என்ன?
*
ஓடிடும் கால்களே –
ஒற்றை நிமிடம் நில்லுங்கள்..
தேடிடும் நெஞ்சத்தை –
நிறுத்தி மெல்லக் கேளுங்கள்..
நீ உண்ணும் உணவின் நெல்மணி –
எங்கே விளைந்தது தெரியுமா?
நீ சுவாசிக்கும் மூச்சுக் காற்றது –
எங்கே இருந்தது தெரியுமா?
*
கேள்விகள் என்பது உள்ளவரை –
மண்மீது மகத்துவம் நிகழும்..
பதில்கள் என்பது இருக்கும்வரை –
உயிர்கள் சிறப்புடன் வாழும்..
மனிதம் என்பது துளிர்க்கும்வரை –
மனதில் உன்னதம் பிறக்கும்..
அன்பு என்பது உதிக்கும்வரை –
பூமி நில்லாமல் சுழலும்..
ஓடிடும் கால்களே –
ஒற்றை நிமிடம் நில்லுங்கள்..
தேடிடும் நெஞ்சத்தை –
நிறுத்தி மெல்லக் கேளுங்கள்..
*
குரல் : மீனாட்சி தேவராஜன்
ஒளிப்பதிவு : ஷ்ரவன் கலை
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.