மஞ்சள் மேகமே
மஞ்சள் மேகத்தை தூதாக அனுப்பி, தன் காதலனிடம் போய் தன்னைப் பற்றி எத்தகவலையும் சொல்லாமல், தன் உள்ளக் காதலையும், அதன் செல்ல மோதலையும் சொல்லச் சொல்கிறாள்.
*
ஓ! மஞ்சள் மேகமே –
உன்னிடம் ஒன்று சொல்கிறேன்..
போய் அவனிடம் சொல்லி வருவாயா?
நீ! சொல்லி வந்தால் –
கேட்டதை தாண்டியும் தருகிறேன்..
போய் அவனிடம் சொல்லி வருவாயா?
நான் யாரென உரையல் –
என் பேரென்ன உரையல்..
என் ஊரென்ன உரையல் –
என் பணியென்ன உரையல்..
நான் எங்கென உரையல் –
என் மொழியென்ன உரையல்..
என் வழியென்ன உரையல் –
என் திறமென்ன உரையல்..
பின்னையும் உரை நீ…
*
என் உள்ளக் காதலை –
அதன் செல்ல மோதலை –
அதால் அரும்பும் உளறலை –
அவற்றின் அழகுத் துள்ளலை..
போதும்! போதும்!
போதும்! போதும்!
போதும்!
*
குரல் : ரம்யா மேனன்
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.