முள்ளுவாங்கி

ஆடு, மாடு மற்றும் மனிதர்களின் கால்களில் குத்திய முள்ளை எடுக்கப் பயன்படும் இரும்பாலான சிறு கருவி.
[சிறு வளையத்தில் கோத்த முள்ளை தோண்ட ஏதுவான ஊசி, பிடித்தெடுக்க ஓர் இடுக்கி போன்றவற்றால் ஆனது.]
[முள்ளுவாங்கி = முள்வாங்கி = முள்ளாங்கி]
– போயி மாடத்துல கீற முள்ளுவாங்கிய எடுத்தாந்து, ஆட்டுக்கால்ல இருக்க முள்ள எடுத்துவுடு.
– கால்ல பொத்த முள்ள எடுத்துட்டு தர்றன்னு முள்வாங்கி வாங்கினு போனவன் இன்னும் தர்ல.
*