நீ மட்டும்
விரலால் உயிர் மீட்டும் சொந்தம் ஒன்று வாய்த்துவிட்டால் போதும், உயிர் வாழும் காலம் வரைக்கும் ‘நீ மட்டும் போதும்’ எனலாம்.
*
நீ மட்டும் போதும் என்பேன் –
உயிர் வாழும் காலம் வரை..
உன் பக்கம் சொர்க்கம் என்பேன் –
என் ஆயுள் தீரும் வரை..
சொல்லாலே எனை வெல்லும் –
நீதானே என் அர்த்தம்..
கண்ணாலே எனை தள்ளும் –
நீதானே என் மொத்தம்..
இதழாலே அழல் மூட்டும் –
நீதானே என் அந்தம்..
*
பேசாமல் நீ பேசும் –
பேச்சென்றாலும் போதுமடா..
இல்லாமல் நீ இருக்கும் –
இருப்பென்றாலும் இனிக்குமடா.. ஆ…
நீ மட்டும் போதும் என்பேன் –
உயிர் வாழும் காலம் வரை..
நீ மட்டும் போதும் என்பேன்…
*
குரல் : மீனாட்சி தேவராஜன்
ஒளிப்பதிவு : ஷ்ரவன் கலை
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.