நேத்து வரை
யாரோவான இருவரை எது ஒன்று சேர்க்கிறது? புரியாத இவ்வாழ்வு எதுவரை இனிக்கக்கூடியது?
*
நேத்துவர நேத்துவர –
காதல் கொண்டிட்டோம்..
காத்துவர காத்துவர –
கவிதை கண்டிட்டோம்..
ஆழம்வர ஆழம்வர –
அன்பில் சென்றிட்டோம்..
ஆசவர ஆசவர –
ஆச வென்றிட்டோம்..
*
புரியாதப் புதிர்தான் –
இருவரை சேர்க்கிறது..
அறியாதப் பொழுதில் –
பெயரொன்று வைக்கிறது..
தெரியாத வரைதான் –
வாழ்க்கை இனிக்கிறது..
மறியாத வரைக்கும் –
வாழ்தல் பிடிக்கிறது..
நேத்துவர நேத்துவர…
*
குரல் : ரம்யா மேனன்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.