வா அன்பே

மகிழவும் முகிழவும் அழைக்கும் அவளவனை, உருகவும் மருகவும் அழைக்கிறாள் அவனவள்.
*
ஆ: ஒரு மஞ்சள் மேகம் –
கொஞ்சல் சிந்த..
மகிழலாம் –
முகிழலாம் –
வா அன்பே..
பெ: ஓர் அஞ்சல் இன்றி –
கெஞ்சல் பூக்க..
உருகலாம் –
மருகலாம் –
வா அன்பே..
ஆ: உன் பார்வை இழுக்குது –
புதிர் இன்பம் தருகுது..
பெ: உன் தீண்டல் நனைக்குது –
உயிர் வரைக்கும் நிறைக்குது..
*
பெ: மலர்போலே இலைகள் –
தூறிடும் நொடிகள் –
மாறிடும் கதைகள்..
இலைகள் –
நொடிகள் –
கதைகள்..
ஆ: இசைபோலே சத்தங்கள் –
ஒலித்திடும் தருணம் –
ஓடிடும் வலிகள்..
சத்தங்கள் –
தருணம் –
வலிகள்..
ஆ / பெ: ஒரு மஞ்சள் மேகம் –
கொஞ்சல் சிந்த..
மகிழலாம் –
முகிழலாம் –
வா அன்பே..
*
குரல் : ரம்யா மேனன் & ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : U K அருண் & ஷ்ரவன் கலை
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.