தள்ளித் தள்ளி
தேகம் முழுக்க மோகம் பற்றி எறிய, காதல் கனலாய் பட்டுத் தெறிக்க, விழிகள் ஏங்கும் ஏக்கம் இருக்கிறதே, அதை அவன் எப்படிச் சொல்வான்?
*
தள்ளித் தள்ளிப் போகதே –
தைச்சிலையே..
என்விழிகள் –
ஐ உருவம் –
படித்திட படித்திட ஏங்குதே..
அள்ளி அள்ளிப் போவாயே –
தீக்கடலை..
மெய் நிலத்தால் –
வீரமுடன் –
வியந்திட வியந்திட மிதக்கவே..
என்ன? – அதனால்..
வருமே! – அதுநாள்..
இனியும்? – போதும்..
மனமே! – பொறுத்திடு.. ஓ..ஹோ..
*
காதல் கனலாய் பட்டுத் தெரிக்குது –
தீராத ஊடல் மிச்சமிருக்குது –
மறவாதே..
தீக்கடை தாகத்தில் தத்தித் தவிக்குது –
இசையாத கருவி ரெண்டை இசைப்போம் –
இப்போதே..
என்ன? – அதனால்..
வருமே! – அதுநாள்..
இனியும்? – போதும்..
மனமே! – பொறுத்திடு..
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.