எட்டுது எட்டுது
எட்டிடாத வானமும், கொட்டிடாத ஆசையும் இக்காதலைத் தவிர வேறெதில் சாத்தியமாகும் நண்பனே?
*
சட்டுனு சொல்லிப்புட்டா காதல –
சக்கரமா சுத்துறன்டா நானும்..
பட்டுனு சொல்லிப்புட்டா காதல –
பட்டமாப் பறக்குறன்டா நானும்..
மெல்ல சிரிச்சா – செதறுனன்..
பாத்து மொறச்சா – பதறுனன்..
பக்கம் வந்தா – ஒதறுனன்..
தள்ளிப் போனா – கதறுனன்..
ஓட்டமா ஓடிவருவன் –
அவள பாக்கத்தான்..
வாட்டமா தேடித்தருவன் –
அவள சேக்கத்தான்..
ஆட்டமா ஆடித்திரிவன் –
அவள நெனச்சிதான்..
பாட்டமா பாடிக்கெடப்பன் –
அவள ரசிச்சிதான்..
எட்டுது எட்டுது எட்டுது எட்டுது –
எட்டிடாத வானமும்..
கொட்டுது கொட்டுது கொட்டுது கொட்டுது –
கொட்டிடாத ஆசையும்..
*
பாத்ததும் பூத்துடுவன் –
பாக்காத ஒலகத்த..
பூத்ததும் கோத்துடுவன் –
சேக்காத கவிதய..
கெத்தா சொல்லிப்போவன் –
அவள படிச்சிதான்..
நைசா தூள்ளிகுதிப்பன் –
அவள புடிச்சிதான்..
எட்டுது எட்டுது எட்டுது எட்டுது –
எட்டிடாத வானமும்..
கொட்டுது கொட்டுது கொட்டுது கொட்டுது –
கொட்டிடாத ஆசையும்..
*
குரல் : கோல்டு தேவராஜ்
ஒளிப்பதிவு : U K அருண்
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.