வா வா வாடிப் புள்ள
காதலில் மட்டும் எப்படித்தான் இத்தனை வகைவகையான செல்லப்பெயர்கள் அரும்புகிறதோ தெரியவில்லை!
*
ஹே நாட்டுக்கட்டே –
வா வா யரல வழல..
ஏ கமருக்கட்டே –
தா தா கசட தபற..
*
வா வா வாடிப் புள்ள –
ஒன்னுக்குள்ள ஒட்டிக் கொள்ள..
நீநான் நான்நீ நாம்.. ம்.. ஹிம்..
தா தா தாடிப் புள்ள –
எக்கசக்க கிஸ்ஸ மெல்ல..
நான்நீ நீநான் நாம்.. ம்..ஹிம்.
ஒட்டி ஒட்டி நின்னு நின்னு செல்பீ எடுத்துக்கலாம் – தெனம்
திட்டி திட்டி சொழட்டி சொழட்டி குத்பீ விட்டுக்கலாம்..
முட்டி முட்டி எட்டி எட்டி பீல்பீ கட்டிக்கலாம் – மனம்
சொட்டி சொட்டி கட்டி கட்டி ஹஃபீ மூட்டிக்கலாம்..
*
பரபர பம்பரம் சலசல சம்பரம் –
போல ஒன்ன சுத்திக் கெடப்பன்..
பறபற மும்முரம் கரகர சாமரம் –
கொண்டு ராத்திரி விசிறி விடுவன்..
சாலையில் பறக்குறன் வானில் நடக்குறன் –
சத்தியம் செய்யணுமா சொல்லு செய்யுறன்..
உலகம் நீதான் உயிரும் நீதான் –
சந்தேகம் இருந்தா செத்து காட்டுறன்..
பேச்சியில கொறயில்ல –
சொல்லுல மொறயில்ல –
போகுற போக்குல கவுக்கும் ஊருக்குள்ள..
ஹே ஹே நாட்டுக்கட்டே..
தித்திப்பு கமருக்கட்டே..
சீனியில் செஞ்சப் புட்டே..
அடியே தேன் சொட்டே..
*
குரல் & படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.