அடியே காதல்காரியே
தன்னை விரட்டி விரட்டிக் காதலிக்கும் காதல்காரியைப் பார்த்து, முதல் தடவையாக சொல்கிறான்.
*
அடியே காதல்காரியே –
என் உள்ளத்தூறியே..
அடியே நேசக்காரியே –
என் செல்லப்பேரியே..
நீ நான் –
நீளம் செல்வோம் வா..
ஆசை தீர்ந்தும் –
கட்டிக் கொள்வோம் வா..
*
மிச்சம் மீதி வைக்காமலே –
தித்தி தித்திக் கொள்வோமா?
நேரங் காலம் பாக்காமலே –
சண்டையிட்டு வெல்வோமா?
வழி மொழி இல்லாமலே –
அந்தம் வரை செல்வோமா?
சொந்த பந்தம் கேக்காமலே –
சொர்க்கம் அதை செய்வோமா?
*
இரவை நீட்டி –
வண்ணம் அடிப்போம் வா..
பகலைக கூட்டி –
எண்ணம் படைப்போம் வா..
தேகம் ஒட்டி –
தீயை அணைப்போம் வா..
இதழ்கள் கட்டி –
இம்சை வளர்ப்போம் வா..
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : U K அருண்
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.