ஓணாங்கொடியின்
பவுர்ணமி நிலவாக உடன் வருகிற காதல் எத்தனை அழகானது தெரியுமா? அதிலும், மூக்கரக்காற்றாக வளைத்துப் போகும் காதலை எவ்வாறு சொல்லில் வரையறுப்பது?
*
ஓணாங்கொடியின் ஒசரப் பார்வையில் –
தடுக்கி விழுந்தன்..
ஞானாச்செடியின் குட்டி நெழலுல –
துள்ளி எழுந்தன்..
அரசங்கல்லின் மோன மொழியில –
விரும்பி நனஞ்சன்..
மணங்கொல்லியின் கொடி வழியில –
மெல்ல சிரிச்சன்..
பவுர்ணமி நெலவாட்டம் –
கூட வருகிற..
மூக்கரக் காத்தாட்டம் –
வளச்சி போகுற..
*
குரல் : ரம்யா மேனன்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.