உடைந்து போனேனடி
காதலில் குதூகளித்து துள்ளித் திரிந்த இதயம், தான் உடைந்து போனக் கதையை வலிவார்த்தைகளால் தன்னவளை நோக்கிச் சொல்கிறது.
*
உடைந்து போனேனடி – நான்
உடைந்து போனேனடி..
உறைந்து போனேனடி – நான்
உறைந்து போனேனடி..
பேசிய சொல்லில் –
வீசிய காதலில்..
நீட்டிய தூரத்தில் –
கூட்டிய பாரத்தில்..
தனிமையில் தவித்தேனே… ஆ…
*
நேற்று வரைக்கும் –
சொன்ன வார்த்தைகள்..
காதில் ஒலிக்கிறதே..
விழிகளின் ஓரம் –
வழியும் வலித்துளி..
உன்பேர் சொல்கிறதே..
உன்பேர் சொல்கிறதே…
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : U K அருண்
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.