டர்னக்கா
தன் கலை மூலம் அடுத்தவரின் கவலைகளைப் போக்குபவன் பெரும் கலைஞன் ஆகிறான்.
*
டர்னக்கா பாட்டு ஒண்ணு –
நான் பாடக் கேட்டு நின்னு –
ஊரெல்லாம் கைய தட்டிக் கொண்டாடுங்க..
கவலயெல்லாம் போக்க வச்சி –
கத கதையாக் கேக்க வச்சி –
மனசெல்லாம் புதுசாக்கிக் கூத்தாடுங்க..
கரகாட்டம் ஆடுவன் –
அட மயிலாட்டம் ஆடுவன்..
புலிஆட்டம் கூட நல்லா ஆடிடுவன்..
தெம்மாங்குப் பாடுவன் –
அட ஏத்தப்பாட்டும் பாடுவன்..
தாலாட்டு கூட தூளாப் பாடிடுவன்..
*
பொண்ணுங்கன்னா வெக்கம் –
பசங்கன்னா குறும்பு..
வாழாத வாழ்க்க என்ன வாழ்கையடா..
பெருசுன்னா பட்ட –
சிறுசுன்னா கள்ளு..
களவும்தான் கத்துக்கிட்டு மறக்கணும்டா..
பகலுன்னா ஒழப்பு –
இரவுன்னா களிப்பு..
நொடியும்தான் மிச்சமின்றி வாழணும்டா..
எதிரின்னா மொறப்பு –
நண்பன்னா அணப்பு..
சொந்தத்த சேத்து வச்சி ஆளனும்டா..
லை லை என்றுதான் –
பழச எல்லாம் மறப்போம்..
லை லை என்றுதான் –
புதுசாக செய்வோம்..
லை லை என்றுதான் –
புடிச்ச வாழ்வ வாழ்வோம்..
லை லை என்றுதான் –
நெனச்ச வழியில் செல்வோம்..
டர்னக்கா…
*
குரல் : கோல்டு தேவராஜ்
ஒளிப்பதிவு : U K அருண்
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.