மனமே மனமே
தன்னை விட தன்னவளை பெரிதாய் நேசித்தவன் பிரிவின் வலிமொழியில் சொல்கிறான்.
*
மனமே மனமே –
விலகி செல்லாதே..
நொடியே நொடியே –
தூக்கி எறியாதே..
தினமே தினமே –
தீயில் தள்ளாதே..
கணமே கணமே –
உயிரை பிரியாதே..
*
உன் விரல் பிடித்து –
நடந்த வழி..
நம்மை கேட்டிடுமே –
என்சொல்வேன்?
உன் அருகமர்ந்து –
ரசித்த இசை..
வலியை மூட்டிடுமே –
ஏதாவேன்?
உன் கதைகேட்டு –
துயின்ற இரவு..
நினைவை தீட்டிடுமே –
எங்கே போவேனோ?
*
குரல் & படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.