சுயமிக்காரன்
நின்றால் சுயமி (selfie). நடந்தால் சுயமி. படுத்தால், எழுந்தால், விழுந்தால், சிரித்தால் சுயமி சுயமி சுயமி. மொத்தத்தில் இவனொரு சுயமிக்காரன்.
*
சுயமி –
சுயமி..
நகர்பேசி எடுத்து –
நிழற்படவி திறந்து..
சொடுக்க சொடுக்க ஒளிப்படங்கள்..
நிழற்படவி மாற்றி –
பாவிப்பு காட்டி..
சொடுக்க சொடுக்க சுயமிகள்..
நான் சுயமிக்காரன் –
நித்தமும் படிப்பன்..
அழகு புன்னகை தொடுப்பன்..
நான் சுயமிக்காரன் –
புதுமைகள் பிடிப்பன்-
புதுப் பெயரும் வைப்பன்..
ஏ.. முற்சுயமி –
பிற்சுயமி –
ஆடிச்சுயமி –
குழுச்சுயமி..
ஏ.. பக்கச்சுயமி –
பிழைச்சுயமி –
பாதிச்சுயமி –
மேற்சுயமி..
சுயமி சுயமி சுயமி –
சுயமி சுயமி..
மி மி மி மி மி மி..
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.