உச்சி வரை
உச்சி வரை காதல் பூத்த ஒருவனுக்குதான், தன் உயிரின் ஓசை கேட்குமாம்!
*
உச்சி வரை காதல் –
பூக்குதே..
எந்தன் உயிர் ஓசை –
கேக்குதே..
மீண்டும் அந்த மேகம் –
கூடுதே..
பாட்டுப் பாடி கைகள் –
நீட்டுதே..
ஆசைமுகம் காணும் போதெல்லாம் –
நானின்றி நீ ஆவேன்..
*
காலை எது –
மாலை எது –
மறந்து போகுதே..
தாகம் இல்லை –
தூக்கம் இல்லை –
எடையிழக்கின்றேன்..
தூரம் எது –
பக்கம் எது –
தெரிவதில்லையே..
மேலும் இல்லை –
கீழும் இல்லை –
கவிதையாகின்றேன்..
ஆசைமுகம் காணும் போதெல்லாம் –
நானின்றி நீ ஆகிறேன்..
*
குரல் & படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.