வானும் மண்ணும்
இயற்கை மீது பெரும் காதல் கொண்ட ஒருவன், அவை பற்றிய தன் புரிதலை பிறருக்கும் சொல்கிறான்.
*
வானும் மண்ணும் மழையும் காற்றும் –
யாருக்கும் இங்கு சொந்தமில்லை…
இதைப் புரிந்துகொண்டால் –
அதைவிட சந்தோசம் ஏதுமில்லை..
காற்றை வருடல் –
நீரை தீண்டல் –
போலொரு இனிமையில்லை..
நிலத்தைக் காத்தல் –
மரத்தை நட்டல் –
போலொரு கடமையில்லை…
இந்த உலகின் ஒவ்வோர் அணுவும் –
பிறக்கும் உயிருக்கு சொந்தமானதே…
*
தாய்தான் இந்த பூமி –
நாமோ அதன் பிள்ளைகள்…
ஆறும் நீலக் கடலும் –
என்றும் நம் சொந்தங்கள்…
நதிகளில் மின்னி வரும் –
நீர் வெறும் நீரல்ல…
எங்கும் வீசிப் போகும் –
காற்றும் வெறும் காற்றல்ல…
இதைப் புரிந்துகொண்டால் –
அதைவிட சந்தோசம் ஏதுமில்லை…
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசுவாமி
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.