அகத்திரியில் ஏற்றிய நெருப்பு : பின் கடிதம்…

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 22 : ஐயா முதல் ஐயா வரை

அன்புள்ள வாசகர்களுக்கு,

இந்நூலிலுள்ள 22 கடிதங்களையும் அன்றன்றே படித்துவிட்டு பலரும் எனக்கு கடிதம் எழுதினார்கள். அதில் குறிப்பிடும்படியான ஒரு கடிதம்… அக்கா ஒருவர் எழுதியது. அதுவும் ‘வாழும் நட்பு’ கடிதத்தை வாசித்துவிட்டு பக்கம் பக்கமாக கண்ணீர் மல்கி எழுதியிருந்தார்.

அதுமட்டுமல்ல… அன்று மாலையே நகர்பேசியில் அழைத்து ஒருமணி நேரத்திற்கும் மேலாக அழுது புலம்பித் தீர்த்தார். நான்கைந்து நாட்கள் அக்கடிதம் தந்த பாதிப்பிலிருந்து மீளவில்லை என்றும், அடிக்கடி அக்கடிதத்தை வாசிக்கப்போவதாகவும் சொன்னார். ஆம்!

ஒரு கடிதம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கான அண்மைய உதாரணமே இது.

கடிதங்கள் வெறும் காகிதமல்ல; மனத்தின் பிரதிபிம்பங்கள். அதுவும் சொற்களால் கோக்கப்பட்ட சொல்மணிகள் விளைந்த மனத்தாள்கள். நினைத்ததை நினைத்தவாறு எழுதவும், எழுதியதை எழுதியவாறு வாசிக்கவும் வைப்பது. எழுத்துப் பிழைகள் கூட சிறு புன்னகையை வரவழைத்து ரசிக்கவைப்பது, மகிழ்வூட்டக் கூடியது. திரும்பத் திரும்ப வாசிக்கச் சொல்வது, சொற்களை எண்ணியெண்ணி படிக்கத் தூண்டுவது. ஆம்!

கடிதங்கள் உயிரற்ற தாள்களில் எழுதப்படுவது எனினும் உயிருள்ளது. இறப்புச் செய்தியை சுமந்து வந்திருந்தாலும் இறப்பற்றது. பதிலுக்காக நாட்கணக்கில் ஒருவரை காத்திருக்கச் செய்வது. தவிப்பை சுகமானப் பரிசாகத் தருவது. கையெழுத்து வழியில் எழுதியவரின் முகம் காண, குரல் கேட்க, கரம் பற்ற, ஏன் கட்டியணைக்கவும் வைப்பது. இன்னும். இன்னும். இன்னும்.

வளர்ச்சி என்கிற பெயரில் இன்றைக்கு இப்படிப்பட்ட உயரிய கடிதப் பண்பை தொலைத்துவிட்டு, சின்னச் சின்ன சந்தோஷங்கள் தொடங்கி… பெரியப் பெரிய காத்திருப்புகள் வரைக்கும் இழந்து நிற்கிறோம். இறந்தவரின் செய்திக்குக் கீழே போகிற போக்கில் ஒரு ‘RIP’ போடுவதையும், பல மணிநேரக் காத்திருப்பின் – பரிதவிப்பின் அருமையை உணராமல் அடுத்தடுத்த நொடிகளில் எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் செயற்கைத்தனமாக ‘Same to you, ok, me too…’ போன்ற பதில்கள் அனுப்புவதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம்.

இதிலிருந்து விடுவித்து திரும்பவும் உயிர்ப்புள்ள கடிதப் பண்பு நோக்கி யாவரையும் அழைத்துச்செல்லும் சிறு முயற்சியாகவே இக்கடிதங்கள் யாவற்றையும் சொல்வேன். தினந்தோறும் படித்த பலரும் தங்களுக்கும் கடிதம் எழுதும் ஆர்வம் உருவாகியுள்ளதாக சொன்னதைக் கேட்டு பெரிதும் மகிழ்வுற்றேன். அதோடு, இனிவரும் காலங்களில் நானும் தொடர்ந்து எனக்கானவர்களுக்கு கடிதங்கள் எழுதவும் முடிவெடுத்திருக்கிறேன். ஆம்!

குறுஞ்செய்தி, மின்னஞ்சல் யாவும் நொடிநேர மகிழ்வை மட்டுமே தரக்கூடியன. ஆனால், கடிதங்கள் அப்படியல்ல. அனைத்தும் வாழ்நாளெல்லாம் நம்முடன் இருந்து நீடித்த இன்பத்தை தரக்கூடியன.

அவ்வகையில் இந்நூலை வாசித்த நீங்கள் யாரேனும் ஒருவருக்கு அல்லது இந்நூலினை எழுதிய எனக்கு ஒரு கடிதம் எழுதுவீர்களேயானால் அதையே எனக்கும், இந்நூலுக்கும் கிடைத்த பெரும் அங்கீகாரமாக, பரிசாக, விருதாக நினைத்து மனதார ஏற்றுக்கொண்டு பெரிதாக மகிழ்வேன். ஆம்!

இதைவிட வேறென்ன பெரிதாய் உங்களிடம் கேட்டுவிடப் போகிறேன்?!

செப்டம்பர் 03, 2020                                         மிக்க அன்புடன், 

சென்னை – 34                                                 வடிவரசு

*

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – முன் கடிதம்…

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 1 : பிரிவின் தூரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 2 : நான்குபேர்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 3 : நல்விதை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 4 : எத்திசையும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 5 : ஐயன் சொல்

அகத்திரியில்ஏற்றியநெருப்பு – 6 : அகத்திரியில் ஏற்றிய நெருப்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 7 : வாழும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 8 : முன்னாள் இருந்தவர்கள்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 9 : குழந்தைமை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 10 : நடைமருந்து

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 11 : செயலின் ருசி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 12 : உயிர்ப்பொருள் யாவும்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 13 : பசியின் குரல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 14 : வாழ்வை வாசித்தல்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 15 : மனப்பேச்சு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 16 : போகும் வழி

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 17 : வாழும் நட்பு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 18 : பின்னோக்கும் கலை

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 19 : இருமந்திரம்

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 20 : எதிர்பாட்டு

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 21 : மணவினா

அகத்திரியில் ஏற்றிய நெருப்பு – 22 : ஐயா முதல் ஐயா வரை

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=