அப்பாவின் காதலன் – ராம்

ஐயா (எ) 95 வயது குழந்தை!

நண்பர் வடிவரசு சமகால இலக்கியத்திற்கு புதுவரவு. பத்திரிகையாளராக பயணித்து  எழுத்தாளராகவும், பாடலாசிரியராகவும் தன்னை உருமாற்றியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் திருவடத்தனூர் கிராமத்தை மையமாக கொண்டு  தன் பால்யகாலம் முதல்  இந்நாள்வரை,  ஒரு தந்தைக்கும் மகனுக்குமான நட்பை, மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய கடமையை இந்நூலில் பதிவு  செய்துள்ளார்.

மேலும் போகிற போக்கில் மரங்களையும், தாவரங்களையும் ஆவணப்படுத்தியுள்ளார். அதிலொன்று  துரிஞ்சி மரம்,

(Albizia amara-தாவரவியல் பெயர்) ஆனால்,  இந்தச்சொல் எனக்கு புதியதாகயிருந்தது. இந்த மரத்தை  எங்கள்  ஊரில்  உசல  மரம் என்று அழைப்பதுண்டு. சில ஊர்களில் அரப்பு மரம். இதன் இலைகள்   தலைக்கு மிகச்சிறந்த மருந்து. இதன் பூக்கள்  வாகை பூ போன்றுயிருக்கும்.  அதனால் இது கருவாகை மரம் என்று அழைக்கப்படுவதுண்டு. சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை அடிவாரங்களில் ஊஞ்ச மரமென்று அழைக்கப்படுகிறது.  இதன் இலை தும்பிகள் உணவாக உண்ணும்.

மேலும்  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கிராமங்களில் உசிலை மரம் என்றும் அழைக்கப்படுகிறது. சங்காலத்திலிருந்தே  ஒரு மரம் ஒவ்வொரு ஊரிலும் பெயர் மருவி அழைக்கப்பட்டு வருவதை அறிஞர்கள்  பதிவு செய்துள்ளனர்.

வயதானவர்களை புறக்கணிப்பது பிந்தி வரும் பிள்ளைகளுக்கு சமூக சீர்கேடுயென்றும், யார்யென்னா சொன்னாலும் தந்தை நாம தான் கொண்டாடப்பட வேண்டுமென்பதில் அடிபிசுங்காமயிருக்கிறார் வடிவரசு.

தனது 95 வயதான தந்தையை  விமானத்தில் பறக்க வைத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். 

இந்த புத்தகத்தை படித்துவிட்டு  என்னை பால்ய காலத்தில்  என்னை சைக்கிள்களில் அமர வைத்து அழகு  பார்த்த அப்பாவை ஒருவாட்டியாவது விமானத்தில் பறக்கவைக்க அவாவில் வீட்டிற்கு நுழைகிறேன். 

நான் எப்போதோ சென்னை மாநகரத்தில் வாங்கிய  சட்டையை போட்டுக்கொண்டு  அவர் கட்டிய கூரை வீட்டு மண்சுவர் முற்றத்தில்  மாட்டப்பட்ட  போட்டாவில் என்னைப் பார்த்து  சிரித்துக் கொண்டுயிருக்கிறார்.

அவருக்கு பிடித்த 14 பீடி( பிராண்ட்) புகையின்  வாசனை வீட்டை சுற்றி வானத்தை வட்டமிடுகிறது.

அப்பாவை வாழும் போதே கொண்டாடிவிடுங்கள்.  காலம் யாரிடமும் சமரசம் செய்து கொள்ளாது. 

“திரைப்பாடலாசிரியராக வாய்ப்பு கேட்டு அலையும்போதெல்லாம் சிலரால்  புறக்கணிக்கப்பட்டதாக  தனிப்பட்ட முறையில் கூறினார்.”

“புறக்கணிக்கப்படும் ஒவ்வொருவரும் யாராவது ஒருவரால் அடைக்கலம் கொடுக்கப்படுகிறது.”

அந்த மனிதநேயம் தான்  மானிட சமூகத்தை உயிர்ப்புடன் இயங்க வைக்கிறது. 

புகைப்படம்  : ஐயா (எ) 95 வயது குழந்தை புத்தகத்தின்  ஆசிரியர், நண்பர்  வடிவரசு அவர்களுடன் விஷ்ணுபுரம் விருது விழா  கோவை நிகழ்வில்.

நன்றி,

வாழ்த்துக்களுடன்,

ராம்.

*

ஐயா (எ) 95 வயது குழந்தை! – ‘நாஞ்சில் நாடன்’ முன்னுரை

ஐயா (எ) 95 வயது குழந்தை! – என்னுரை

ஐயா () 95 வயது குழந்தை! – 1

ஐயா () 95 வயது குழந்தை! – 2

ஐயா () 95 வயது குழந்தை! – 3

ஐயா () 95 வயது குழந்தை! – 4

ஐயா () 95 வயது குழந்தை! – 5

ஐயா () 95 வயது குழந்தை! – 6

ஐயா () 95 வயது குழந்தை! – 7

ஐயா () 95 வயது குழந்தை! – 8

ஐயா () 95 வயது குழந்தை! – 9

ஐயா () 95 வயது குழந்தை! – 10

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 11

ஐயா () 95 வயது குழந்தை! – 12

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 13

ஐயா () 95 வயது குழந்தை! – 14

ஐயா () 95 வயது குழந்தை! – 15

ஐயா (எ) 95 வயதுகுழந்தை! – ‘கண்மணி குணசேகரன்’ பின்னுரை

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=