தந்தைமையையும் அனுபவத்தையும் போற்றுதல் – இரா.பூபாலன்

அப்பா ஓவ்வொரு மனிதனுக்கும் முதல் ஆசான்; முதல் கதாநாயகன்; முதல் நண்பன். அப்பாவைப் பற்றிய கவிதைகள், கதைகள் தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் வெளியாகியும் கொண்டாடப் பட்டும் இருக்கின்றன. 95 வயதான தனது அப்பாவுடனான ஒரு மகனின் அனுபவங்களையும், தந்தைமையின் மகத்துவத்தையும் , தனது கிராமத்தின். அழகையும், கிராமத்து வாழ்க்கையின் மேன்மையையும் மிக அழகாக கட்டுரைகளாக வடிவரசு எழுதி வெளியிட்டிருக்கும் நூல் தான் ஐயா என்கிற 95 வயது குழந்தை எனும் 102 பக்க அளவிலான கையடக்க சிறு நூல்.
வெட்சி ஆய்விதழில் கவிஞர் இரா.பூபாலன் அவர்கள் ‘ஐயா’ நூல் குறித்து எழுதிய வாசிப்பனுபவம்.