பச்சை வைத்தல்

உடல்நலம் சரியாக வேண்டிக்கொண்டு ஊரின் வெளிப்புறத்தில் பானகம் கரைத்துவைத்து படைப்பது.

[வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லையென்றால் அக்கம் பக்கத்து பயல்களிடம் வத்தி, கற்பூரம், பொரி கடலை, வெள்ளம், வெற்றிலைப் பாக்கு, சிவப்பு, மஞ்சள், கெதம்பொடி, விபூதி போன்றவற்றோடு காணிக்கை காசும் கொடுத்தனுப்பி ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆள் நடமாட்டம் இல்லாத இடமாகப் பார்த்து மூன்று கற்களை எடுத்துவைத்து கழுவிப் பொட்டிட்டு, பானகம் கரைத்துவைத்து படைப்பது வழக்கம். இதனை ‘பச்சை’ என்றும், ‘பச்சை வைத்தல்’ என்றும், ‘பச்சையிடுதல்’ என்றும் சொல்வர். அவ்வாறு படைத்துவிட்டு எடுத்துவந்து தரும் விபூதியை நெற்றியிலும் கழுத்திலும் பூசிக்கொண்டால் உடனே உடல் நலம்பெரும் என்பது நம்பிக்கை.]

[பச்சை வைத்தல் = பச்சை = பச்ச = பச்சையிடுதல்]

– போயி பச்ச வச்சியார யார்னா ரண்டு பசங்கள பாத்து கூட்டியா தாத்தா.

– பச்சவச்ச திர்நூற எடுத்தாந்து போட்டம்னா போரும், எம்மாம்பெரிய நோவா இருந்தாலும் சட்டுனு செரியாபுடும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=