ஒண்ணாவூத்தி சோறு

காய்கறி, புளி கரைசல், அரிசி யாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பொங்கும் ஒருவகை சோறு.
[எங்கள் கிராமத்தின் மிகப் பிரபலமான உணவிது. இன்ன காய்கறி என்றில்லாமல் இருக்கும் காய்கறிகளை எல்லாம் வெட்டி ஒன்றாகப் போட்டுப் பொங்குவது.]
[ஒண்ணாவூத்தி சோறு = ஒண்ணாவூத்தன சோறு = ஒண்ணாத்தி சோறு]
– ஒண்ணாவூத்தி சோறு இப்பதான் அடுப்புல வச்சிகீறன், செத்த இரு எறக்கிட்டு வர்றன்.
– என்னமோ நேத்துலருந்து ஒண்ணாவூத்தன சோறு தின்னணும் போல கீது, ஆக்கித்தா ஆயா.
*