புது  வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்த  நல்ல புத்தகம் – என்.ஸ்ரீராம்

ஐயா (எ) 95 வயது குழந்தை!

சமீபத்தில் எனக்கு வேறு புது  வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்த  நல்ல புத்தகம்  “” ஐயா (எ ) 95 வயது குழந்தை “‘.

திருவண்ணாமலை அருகே ஒரு குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்த கவிஞர் வடிவரசு தன் 95 வயதான தந்தையின் ஆளுமை, எதார்த்த சுபாவம், வாழ்வுமுறை, இயற்கையோடு இயந்த அறிவு முதிர்ச்சி என தான் அறிந்தவற்றைக் கொண்டு அவரையே முதன்மைப் பாத்திரமாக வைத்து எழுதிய அனுபவக் கட்டுரையே இப்புத்தகம்.

ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதை படித்த வாசிப்பு அனுபவத்தை  எனக்கு கொடுத்தது. வடிவரசின் தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை, திருவண்ணாமலை வட்டார வழக்குச் சொற்களைக் கையாண்ட விதம் சிறப்பு.

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் முன்னுரையும்  தனித்துவமானது. அந்த முன்னுரையில் மரம் செடி, கொடி பற்றிய அறிதல் கொண்ட எழுத்தாளர்களாக என்னையும், கண்மணி குணசேகரனையும் குறிப்பிட்டுள்ளார். நாஞ்சில் நாடன் அவர்கட்டு இப்பதிவின் மூலம் நன்றி கூறிக்கொள்கிறேன்.

கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தை வாசிப்பவர்கள் தன் தந்தை மீதான அக்கறையும் அனுசரணையும் ஒருபடி கூடுவதை உணர்வார்கள்.

கவிஞர் வடிவரசு தற்சமயம் சென்னையில் தங்கி  திரைப்படப் பாடல்கள் எழுதிவருகிறார். வெற்றிபெற வாழ்த்துகள். மேலும் நிறைய எழுதவும் வாழ்த்துகள்.

 – என்.ஸ்ரீராம்

*

ஐயா (எ) 95 வயது குழந்தை! – ‘நாஞ்சில் நாடன்’ முன்னுரை

ஐயா (எ) 95 வயது குழந்தை! – என்னுரை

ஐயா () 95 வயது குழந்தை! – 1

ஐயா () 95 வயது குழந்தை! – 2

ஐயா () 95 வயது குழந்தை! – 3

ஐயா () 95 வயது குழந்தை! – 4

ஐயா () 95 வயது குழந்தை! – 5

ஐயா () 95 வயது குழந்தை! – 6

ஐயா () 95 வயது குழந்தை! – 7

ஐயா () 95 வயது குழந்தை! – 8

ஐயா () 95 வயது குழந்தை! – 9

ஐயா () 95 வயது குழந்தை! – 10

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 11

ஐயா () 95 வயது குழந்தை! – 12

ஐயா (எ) 95 வயது குழந்தை! – 13

ஐயா () 95 வயது குழந்தை! – 14

ஐயா () 95 வயது குழந்தை! – 15

ஐயா (எ) 95 வயதுகுழந்தை! – ‘கண்மணி குணசேகரன்’ பின்னுரை

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=