ஐயா (எ) 95 வயது குழந்தை! – கடிதங்கள் 1

“ஐயா (எ) 95 வயது குழந்தை” புத்தகம் ஐயா அவர்களின் அன்பையும், அனுபவங்களையும், வாழ்க்கை பாடங்களையும் எங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொண்ட பேரழகான படைப்பு.
மென்மேலும் எழுத இருக்கும் படைப்புகளுக்கும் ஐயா அவர்களின் ஆசியும் கடவுளின் ஆசியும் உங்களோடு.
– ஜெனிதா, சென்னை.
*
எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது ஐயா புத்தகம் எழுதிய வடிவரசு அவர்களிடம் இருந்தே அந்த புத்கத்தை பெற்றதற்கு. முதல் இரண்டு chapter படித்தேன். அவர் தனது தந்தையை ஐயா என்று அன்போடு அழைக்கும் விதம் மனதை நெகிழ வைக்கிறது. எனக்கு பேருவகை தந்த மிகவும் அருமையான அர்த்தமுள்ள இந்த படைப்ப அளித்தமைக்கு மிக்க நன்றி!
– நித்திலா பாரதி நல்லசாமி, ஈரோடு
*
வணக்கம்.
ஐயா புத்தகம் படித்தேன்
நல்ல பதிவு
ஐயா மாபெரும் தலைவன்
வாழ்க வாழ்க
கிராமப்புற வாழ்க்கையை
தியாகியை
நல்ல தகப்பனை
உழைப்பாளியை
படைப்பாளியை
பாடகரை
நல்ல நண்பனை
தமிழர்களுக்கு அறிமுகம்
செய்திருப்பது பாராட்டுக்குரியது
நன்றி
– குணா.
*
ஐயா (எ) 95 வயது குழந்தை! – ‘நாஞ்சில் நாடன்’ முன்னுரை