ஆகாசம் நீலநெறம்

வைகறையில் விழிக்கும் கோழிகளிடம் தன் ஆழ்கடல் மனசுக்குள் வைத்த ஆசையைச் சொல்லி, கவிதையாக கூவச்சொல்கிறாள், எட்டி எட்டி தாவச்சொல்கிறாள். அது மட்டுமா? இன்னும் இன்னும்.

*

ஆகாசம் நீலநெறம் – 

ஆழ்கடலு மனசுக்குள்ள..

வச்சிப்புட்டா ஆசவொண்ணு –

வைகற கோழிங்களே.. 

கூவுங்க கவித சொல்லி – 

தாவுங்க எட்டி எட்டி..

கேளுங்க காத தீட்டி –

ஆடுங்க தட்டி தட்டி..

இவ பாட்டக் கேட்டு –

தலயாட்டும் ஆட்ட..

ஒன் வீட்டக் காட்டி –

அனுப்பி வச்சா..

மல்லாட்டப் போருல –

செத்தத்தான் எடுத்து..

ஒன் பேச்ச சேத்து –

கொடுத்தனுப்பேன்..

*

அடடே ஆளுங்கிறுக்கா – 

ஒண்ணால ஆனா கிறுக்கா..

ராத்தூக்கம் காணல காணல –

கனா மட்டும் காணுறா..

சேட ஓட்டும் கறுப்பா – 

சேதியேதும் இருக்கா..

கா(த்)தோட சொன்னா –

கசங்காம போவும்.. 

கொம்புத்தேனுக் கணக்கா –

நெனப்பெல்லாம் சொட்ட..

மல்லிப்பூவா சிரிப்பா –

மஞ்சம்புல்லா எரிப்பா..

ஆகாசம் நீலநெறம் – 

ஆழ்கடலு மனசுக்குள்ள..

*

குரல் : மீனாட்சி தேவராஜன்                   

ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி          

படத்தொகுப்பு : ஷ்ரவன் கலை

*

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.

பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

மழை வான் மறப்ப

உதிரும் இலைகள்

ஓடிடும் கால்களே

ஓட ஓட

கானகா

குறுந்தொகை கண்ணால

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=