வா வா
கைகள் கோத்துக்கொண்டு எல்லையெல்லாம் கடந்து செல்ல, தன் ஆருயிர் காதலியை ‘வா வா’ என அன்புருக மென்மொழியில் அழைக்கிறான்.
*
வா வா – வா வா – வா வா –
கையக் கோத்து நடக்கலாம்..
தா தா – தா தா – தா தா –
எல்லை எல்லாம் கடக்கலாம்..
முத்தம் ஒண்ணு வச்சி –
யுத்தம் தொடங்கலாம்..
மெல்ல மெல்ல தச்சி –
கொள்ள நனையலாம்..
அச்சம் ஏதும் இன்றி –
மிச்சம் வைக்கலாம்..
வச்சி வச்சி சொச்ச –
அன்பில் அணையலாம்..
*
சுழலும் பூமியை –
திருப்பி சுழட்டலாம்..
நீளும் வானத்தை –
சுருட்டி மடக்கலாம்..
ஓடும் காற்றை –
பிடித்து வைக்கலாம்..
ஒளிரும் நிலவை –
ஒளித்து வைக்கலாம்..
இதுவரை இல்லா –
உருவம் சூடி..
உயிருக்குள் உயிரை கோப்போமே..
இதுவரை சொல்லா –
கவிதை தேடி..
இனிமை சேர்ப்போமே..
*
குரல் : ஷ்ரவன் கலை
ஒளிப்பதிவு : லாவண்யா செல்லசாமி
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.