உயிரும் உயிரும்
காதல் இருந்தும் வாழும். இறந்தும் வாழும். காதலுக்கு ஏது வயது? காதலுக்கேது இறப்பு?
*
உயிரும் உயிரும் –
உரசிக்கொள்ளும் காதல் எது?
கண்களும் கண்களும் –
கதைத்துக்கொள்ளும் காதல் அது!
உணர்வும் உணர்வும் –
உயிர்த்துக்கொள்ளும் காதல் எது?
காமமும் காமமும் –
கடந்தரும்பும் காதல் அது!
மூச்சு அது –
நிற்கும் வரை..
பேச்சு அது –
நிற்காது..
மூச்சு அது –
நின்ற பின்னும்..
பேச்சு அது –
குறையாது..
காதல் –
இந்தக் காதல் –
வயதை கடந்தது!
காதல் –
இந்தக் காதல் –
இறந்தும் வாழ்வது!
உயிரும் உயிரும் –
உரசிக்கொள்ளும் காதல் எது?
கண்களும் கண்களும் –
கதைத்துக்கொள்ளும் காதல் அது!
*
குரல் : ஷ்ரவன் கலை
உயிரோவியம் : மீரா
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.