கானகா
தமிழ்க்காதலோடு கணினிக்காதல் கொண்ட இருவர் கணிப்பொறி முன்னமர்ந்து, திருப்பிப்போட்டாலும் அதே வார்த்தையாக வரக்கூடிய (Palindrome) சொற்களை மட்டும் பொறுக்கியெடுத்து, தம் உள்ளக் காதலை வார்த்தைக்காதலாக வடிக்கிறார்கள்.
*
பெ: கானகா –
காவகா..
*
ஆ: மேகமே –
மேயமே..
மோகமோ –
மோனமோ..
மாயமா?
மாயுமா?
கற்க –
கற்க –
மாறுமா..
பெ: நேயனே –
நேசனே..
நாயனா –
நாளனா..
வாடவா?
வாழவா?
தந்த –
தந்த –
வானவா..
ஆ: தீ தித்தி தீ –
பூ மைமை பூ..
தேடுதே –
பாடு-பா –
மேள-தாளமே..
பெ: போ ஐ ஐ போ –
வீ கை கை வீ..
தேயாதே –
தேடாதே –
மேக-தாகமே..
*
ஆ: நீ நானா நீ –
நானா நீ நானா –
தோனுதோ –
மோக-ராகமோ?!
பெ: வா வினவி வா –
மா மர்ம-மா –
மேளமே –
கார-காரகா!
*
குரல் : ஷ்ரவன் கலை & விரித்தி
ஒளிப்பதிவு : ஷ்ரவன் கலை & U K அருண்
படத்தொகுப்பு : சேதுபதி U K
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.