உறுப்பு

ஆடுமாடுகள் ஈன்ற சற்று நேரத்தில் வெளியே வரும் (குடல்போன்றிருக்கும்) சதைப்பகுதி.

[நாய், எலி, காகம் போன்றவற்றிடம் சிக்காமல் காத்திருந்து இதனை பாதுகாப்பாக எடுத்துப்போய் சாக்குப்பையில் அல்லது உறுதியான துணியில் வைத்துச் சுருட்டி ஆலம், அத்தி, வெப்பாலை, அரசு போன்ற பால் மரங்களில் கட்டுவது வழக்கம் (சிலநேரம் அப்படியே குச்சியில் எடுத்துப்போய் கிளையில் தொங்கவிட்டு வருவதும் உண்டு). அவ்வாறு கட்டுவதால் அம்மரம் போன்று கன்றும், மாடும் நீண்ட ஆயுளோடும் செழிப்போடும் இருக்கும் என்பது நம்பிக்கை. சிலர் இதனை ‘மாசி’ என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.]

[உறுப்பு = உறுப்புக்கொடி = மாசி]

– எங்கயும் போவாம மாடு உறுப்பு போட்டதும் எடுத்துனு போயி ஆலமரத்துல கட்டிட்டு வா…

– கொஞ்சம் அசந்தா போரும் நாய்ங்களுக்கும், காக்காவுக்கும் பயிந்து தாய்மாடே உறுப்ப தின்னாலும் தின்னுரும் ஜாக்கரத.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=