அத்த

வீட்டின் பூசையறையில் ஓர் ஓரமாக சுவரில் (மொழுகி) பொட்டிட்டு வணங்கப்படும் மூதாதை தெய்வம்.
[அமாவாசை, கிருத்திகை உள்ளிட்ட முக்கிய தினங்களில், தனியாக அவ்விடத்தில் ஓர் இலையில் படையலிட்டு வணங்குவது வழக்கம். இதனை ‘அத்த படைத்தல்’ என்றும், ‘அத்த கும்பிடுதல்’ என்றும் சொல்வர்.]
[அத்த = அத்தை = அத்த படைத்தல் = அத்த கும்பிடுதல்]
– இன்னிக்கி நேத்துல்ல… நெனவு தெரிஞ்ச நாள்லருந்து நம்மூட்ல அத்த படச்சினு வர்றோம்.
– அத்தய நல்லா கும்டுக்க, அப்பதான் அவ அருளு ஒனுக்கு கெடக்கும்.
*