ள்
துளையின் குறுகுறுப்பில் கிடப்பவனுக்கு
வலியின் பள்ளத்தாக்கு பற்றி
யாதொரு அக்கறையுமில்லை
மேட்டின் தளதளப்பில் திளைப்பவனுக்கு
அகத்தின் விருவெறுப்பு குறித்து
சிறிதும் சிந்தையில்லை
நடுவின் வளவளப்பில் லயித்து
அவசரத்தின் கரம்பற்றி
ஆழக்குதிக்க
மருந்துக்கும் மதிப்பளிக்காது
நினைப்புறும் நாட்கள்
அன்றும்
இன்றும்
ஏன்
என்றும்
எனில்
அவனின் ன்க்கு தெரிந்ததெல்லாம்
அவளின் ள் மட்டும்தான்