சாயல்
தோழிகளில் பலருக்கு அம்மாவின் சாயல் இருப்பதுபோல்
அம்மாவுக்கு தோழிகளின் சாயல்
அல்லது,
அம்மாவிடம் தோழிகளின் சாயல் இருப்பதுபோல்
தோழிகளுக்கு அம்மாவின் சாயல்
தனித்தனியானவர்கள் என்றாலும்
யாரோ ஒருவரின் சாயல்தான்
இன்னும் இன்னும் நெருக்கமாக்குகிறது
ஒவ்வொருவரையும்
அல்லது,
நெருக்கமாக்கத்தான்
யாரோ ஒருவரின் சாயல்
ஒளிந்திருக்கிறது
ஒவ்வொருவரிடமும்
முடிவிலா முகங்களின் முடிவுறு தேசத்தில்
சாயலென்பது
வெறுஞ்சாயல் மட்டும்தானா பாரீரே?!