தேவை

என்னை நான் கடக்க
எழும்போதெல்லாம்
எனக்குப் பதிலாக
யாரோ கடந்துபோகிறார்கள்

மூச்சுமொழியில்
புலம்பிய எனக்கு
என்னை பிடிக்காதது பற்றி
யாதொரு வருத்தமுமில்லை

எறும்புடன் நடக்கும் கால்களுக்கு
ஆசைப்பட்டு
ஏமாந்ததுதான் மிச்சம்

கருணையின் நிழலில்
நொடிநேரமேனும் இளைப்பாறிட
ஆசைதான்

மலர்ப்படியில் வழுக்கிவிழ
எண்ணம்தான்
சற்றுமுன்வரை

ஆனபோதும்
கண்ணீர்ப் பாதையில்
நனையாமல் ஏகிட
தேவையாய் இருந்தது
ஒற்றை முத்தம்
திக்கத்த காதலுக்கும்
திசையத்த என் தேடலுக்கும்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=