கொடேன்


கொடேன்.
எதையாவது கொடேன்
வார்த்தைகளற்ற
உன் மவுனத்தைக் கொடேன்
எல்லையற்ற
உன் காதலைக் கொடேன்
தாங்கமுடியாத
உன் மூன்றுநாள் வலியைக் கொடேன்
யாருமற்றப் பொழுதின்
உன் தனிமையைக் கொடேன்
அல்லது தவிப்பு பூசிய
உன் தலையணையைக் கொடேன்

கொடேன்.
எதையாவது கொடேன்.

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=