முன்னுயிர்

உயிரில் வைத்து உயிர்
நசுக்க நினைத்தபோது
எங்கோபோய் மறைந்துகொண்டது
முகமூடி தரித்த முன்னுயிர்
வானுக்கும் மண்ணுக்குமான இடைவெளி
எறும்பின் கண்ணால் தேடிவிட்டேன்
பீப்பி துளையில் இருப்பதாய் சந்தேகமுற்று
பால்வண்ணம் கொண்டு சலித்தேன்
இடியின் சிணுங்கல் கேட்டு
அண்ணாந்து பார்க்க
ஆசைத்தீ விழுந்து தடுமாறினேன்
தென்னங்கீற்றின் முதுகிலேறி
முன்முகமணிய முற்பட
யாரோ ஒருவரின் வாசம்
வலுகட்டாயமாய் அடித்தது
சதுரமான என்மீது

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=