இடர்கோடு

துயர விந்தினை
ஆசைக் கருவறையுள் செலுத்த
இடர்கோட்டில் நின்று முற்பட்டவனுக்கு
இளமை அவசரமும்
முதுமை நெருடலும்
அரைத்துளி உள்நுழைய
வேதனை முளைவிட்டு
மலர்வதாய் வேடிக்கைகாட்ட
காலத்தின் சதிவலையில் முன்னோக்கி
கனிவின் நிழலற்று
துரோகம் கோரமாய் அவிழ
கூனிக் குருகி வெட்கித்தது
துயர விந்தும்
ஆசைக் கருவறையும்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=