கண்ணீரீரம்

வார்த்தைகள் வெள்ளையாக எடுத்து
பச்சையாக உடுத்திக்கொள்ள
ஆசைவந்ததில்லை
முன்பும் பின்பும்

வரிக்குழிவில்
விழுந்து வாரியிருந்தும்
விழவிழயெழவேத் தோன்றுகிறது
இதுநாள் வரைக்கும்

நினைவின் மையத்தில்
நின்றிருக்கையிலெல்லாம்
நிகழ்வின் வாசம்கூட
தொட்டதில்லை

இருந்தபோதும்
தலையணை கண்ணீரீரம்
வந்து வந்து நனைக்க
உருவமற்ற தீச்சுடரொன்று
தீண்டித் தீண்டி சிரிக்கிறது
கோரமாய்
நடிப்பிருள் முகத்தோடு

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=