ஆசைகளுக்கு நடுநடுவில்
ஆர்ப்பரிக்கும் ஏகாந்த வசனத்தை
அசைவுகளில் மூழ்கிக்கிடக்கும்
அந்தரங்க மேடையில்
இன்மை பூசிய வெற்றுடம்பில்
இதழாலெழுதி
அசைவற்று
இமைமூடிடும் நொடிகளில்
உடலது அறியாமலெழுதியது
அழித்துவிட நினைத்தபோது
ஆசையோடு சேர்ந்து ஆயுளும்
கதறக்கதற உடைபட்டது
கொஞ்சமாய்
கொஞ்சமாய்
கொஞ்சமாய்