உயிரிரை

உள்நுழையும் புகை
மறுவளை வெளியேற
அடைபடுகிறது
ஒவ்வொரு நுழைவும்

சிக்குண்ட உயிருக்கு
தன்னைவிட
முக்கியப்படவில்லை
நெடுநாள் சேமிப்பு

நடக்கப்போவது
தெரிந்திருந்தது
என்றபோதும்
எதிரியிடமெளிதில் சரணடைய
எண்ணமில்லை

அடைபட அடைபட
ஒவ்வொரு வாயிலும்
பனிக்கட்டியாய் கரைந்தது
நம்பிக்கை சுயக்கவசம்

புகை
பெருகப்பெருக
மறையத் தொடங்கியது
இருக்குமிடம்தெரியாமல்
பகை

அதோ
இதோவென
நெருங்கிவிட்டது
அங்கே
இங்கேயென்ற
மரணத்தடம்

தப்பிக்க நினைத்து
இறுதியில் வெளியேற
பின்வரும் பிணக்கூட்டம்
பறிக்கக் காத்திருந்தது
உயிரிரை

விரும்பிவிழும்
உயிர் யாவும்
விரும்பிவரும் உயிரில்லை
நினைத்தது சொல்ல

சொல்முன்
பறிக்கப்பட்ட உயிர்கள்
இல்லாமலிருக்கும் உயிர்கள்
தெரியவேண்டியதில்லை
யாருக்கும் சொல்லி
யாரும்
யாரும்

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=