காட்டுவள்ளி

காடுகளில் தானாக முளைத்து வளர்ந்து கிழங்கு தரும் வள்ளிக்கொடி வகை.

[மூன்று மூன்று இலைகளாக விட்டு கொடிகளாக தரையில் படர்ந்தும், மரக்கிளைகளில் ஏறியும் வளரக்கூடியது. பெரும் காடுகள் என்றில்லாமல் மரங்கள் அடர்ந்த பெரிய கல்லாக்குட்டைகளிலும், புதர்களிலும் முளைக்கக்கூடியது. காட்டுவள்ளி தவிர வனவள்ளி, கொடிவள்ளி எனும் பெயர்களிலும் அழைக்கக்கூடியது.]

[காட்டுவள்ளி = வனவள்ளி = கொடிவள்ளி]

– இப்பதான் போயி காட்டுவள்ளிக் கெழங்கு நோண்டியாந்தமாரி கீது, அதுக்குள்ள ஒருவருசம் ஆய்டிச்சி.

– கட்டுவள்ளிக் கெழங்க நல்லாக் கழுவி சுத்தம் பண்ணி வேவவச்சி தின்னாக்கா… அம்மாம் ருசியாருக்கும் பாத்துக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=