காத்தி சுற்றுதல்

வேர்க்கடலை தொலும்பின் கரித்துகளை நாட்டுத் துணியில் வைத்துச் சுருட்டி பொட்டலமாகக் கட்டி, மூன்று எருக்கு அல்லது ஓணான் சிமிரை ஒன்றாகக் கட்டி (ஒருபக்க நுனியில் மட்டும் நீளமானக் கயிறு ஒன்று கட்டி) அதன் நடுவில் வைத்து நெருப்பிட்டு இருளில் தலைக்குமேல் தூக்கிச் சுற்றுவது.
[அவ்வாறு சுற்றும்போது கரித்துகள்கள் (நெருப்பில் ஒளிர்ந்துகொண்டு) பூப்பூவாகக் கொட்டும். ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று எங்களூர் சிறுவர்கள் இதைச் சுற்றி மகிழ்வர்.]
[காத்தி சுற்றுதல் = கார்த்தி சுத்துதல்]
– எம்மாம்மா, ஐயாகிட்ட சொல்லி காத்தி சுத்த மூணு எருக்கன் சிமிரு வெட்டியார சொல்லும்மா.
– மல்லாட்டத் தொலும்பு கூட பனம்புடுக்கும், பொறிப்பூண்டும் போட்டின்னாதான் காத்தி சுத்தும்போது நறயாப் பொறி வரும்.
*