தலை தீபாவளி! – இரு கடிதங்கள்

அருமையான முயற்சி, ரசிக்க வைக்கும் கட்டுரைகள், தலை தீபாவளி கட்டுரையை மட்டும் படிக்க நேரம் இருந்தது. அழகான சொல்லாடல், அற்புதமான அனுபவம்! எல்லோருக்கும் இப்படி ஒரு வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசையைத் தூண்டும் கட்டுரை! வடிவைப் புரிந்துகொண்டு நல் வாழ்வு வாழும் தங்கை மதிக்கு வாழ்த்துகள்!
அனைத்துப் படைப்புகளையும் விரைவில் படித்துவிடுவேன். தொடரட்டும் எழுத்து மற்றும் இலக்கியப் பணி! இந்த ஆண்டு மிகச் சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துகள்! விரைவில் வெள்ளித்திரையில் வடிவு வரவேண்டும் என்பதே என் அவா! வாழ்த்துகள்!
– அருள்காமராஜ், சென்னை.
*
உண்மைதான் உங்கள மாதிரி யாரும் தல தீவாளி கொண்டாடிருக்க மாட்டாங்க.
நல்லாருந்தது, பசங்களுக்கு வெடி கொடுத்தது.
“வாய்கலசமாக வழிபாடு” என்று தேவாரம் மேற்கோள் காட்டிய இடம் கொஞ்சம் கண் கலங்கிட்டன்.
ரொம்ப நல்லா இருந்தது, எங்களுக்காக ஊருக்கே விருந்துன்னு நினைத்த மனப்பான்மை.
பெரியவிசயம். படிக்கையில் எங்களது காளத்தி அனுபவமும் நினைவாடியது.
– சிவதீபன், மயிலாடுதுறை
*