உயிரந்தம்
காலக்கடைசி சொட்டை
பருகினேன்
முதல்சொட்டில் நின்று
வானிறுதி முனையைத்
தீண்டினேன்
தொடக்கமுனையிலிருந்து
நுனிக்கிளையிலிருந்து
துண்டித்தேன்
அடிவேரை
எல்லாம் முடிகிறது
என்றபோதும்
எதுவும் தேவையில்லை
இப்போதெல்லாம்
எனினும்
உயிரின் அந்தத்தை
பருகவேண்டும்
ஆதியிலிருந்து
அவ்வளவுதான்
வேண்டியதில்லை
பிறிதொன்றும் எனக்கு