கோரவாடை

ஆத்மீகப் பாதையில் திரும்பி நடக்க
அலகிலா விளையாட்டில்
மனமூறிக்கிடந்தபோது
எங்கிருந்தோ தேரை
கேட்டும் கேட்காமல்
வளைய வளைய நகரமுற்பட்டு
மஞ்சம்பில்லில் அறுபட்டேன்

வலிக்காத காயம்
வருத்தமுறாது கீழிறங்க
கடந்து மேலேறியது
மந்தி ஏளனித்து

பார்த்தும் பார்க்காமல் நடந்து
கிணத்துமேடு தாண்ட
சிறுசிறுத்துடைந்தழுதேன்
கசகசப்பின்
கோர வாடையடிக்க

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=