எறவானம்
சீமெண்ணை விளக்கில் சிக்கிய ஈசலாக இருந்தபோது
பேர்பாதி மறந்துபோனது
சுடரும் நெருப்பின் வாசப்புகையில் கலைந்தபோது
நிழலிழந்த மரமானேன்
அசையும் ஒளிக்கேற்ப
ஆடிடும் நிழலில்
நொண்டி நொண்டி நடந்தது
கட்டெறும்பு
அழித்தழித்து விளைந்த ஒளிக்கும்
மீறிமீறி முளைத்த இருளுக்கும்
யாதொரு கனவுமில்லை
ஆசைத்தீச்சுருக்கத்தில்
தொலைந்த மனதுக்கு
பற்றற்ற எறவானம் சொன்னது
மொழுகிய சாணத்தின்
மங்கிய வாசத்தில்
மடமடவென இல்லாத உறவு